பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150.

// 2. இடனறிதல்

=== இடனறிதலாவது வினைசெய்யும் இடமறிதல். காலமறிந் தாலும் இடனறிந்து செய்ய வேண்டுதலின், அதன்பின் கூறப்

பட்டது.

491. தொடங்கற்க வெவ்வினைய மெள்ள ற்க முற்று

மிடங்கண்ட பின்னல் லது.

(இ-ள்) முடியுமிடங் கண்டாலல்லது, யாதொரு வினையுத் தொடங்கா தொழிக, எளிதென்றிகழ்வதும் செய்யா தொழிக, (எ-று)

இஃது இடமறிதல் வேண்டுமென்பதுாம் பகைவர் இடம் சிறி தென்று இகழலாகா தென்பது உம் கூறிற்று. 1

492. சிறுபடையான் செல்லிடஞ் சேரி னுறுபடையா

ஹரக்க மழித்து விடும்.

(இ-ள்) சிறு படையுடையவனுக்கு இயலுமிடத்தே பெரும் படையுடையவன் பொருந்துவனாயின், மன மிகுதி கெட்டுவிடும், (எ-று) .

இஃது இகழ்ந்து செல்லின், வெற்றியில்லையாமென்றது. 2

493. காலாஜ் களரி னரியடுங் கண்ணஞ்சா

வேலாழ் முகத்த களிறு.

(இ-ள்) கண்ணஞ்சாத வேலழுத்தப்பட்ட மு. க த் தி ைன யுடைய களிற்றைக் கால் வீழப்பட்ட களரின் கண் நரி கொல்லவற்

றாம், களர்-போரிற் புறமான கழி.

இது மேலதற்குக் காரணங்கூறிற்று. 3

49.4. சிறை நலனுஞ் சீரு மிலரெனினு மாந்த ருறைநிலத்தோ டொட்ட லசிது.

(இ-ள்) அரண் மிகுதியும் பெருமையும் இலராயினும், மாந் தர் உறைநிலத்தின் கண் பொருந்துத லரிது, (எ-று)

இது, மாந்தர் உறைவிடத்துச் செல்லுங்கால், அறிந்து செல்ல வேண்டுமென்றது . 4.