பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153

13. தெரிந்து தெளிதல்

502. அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர்

பற்றிலர் நாணார் பழி.

(இ-ள்) ஒழுக்கமற்றாரைத் தேறுதலைத் தவிர்க; அவர் ஒரி டத்துப் பற்றுடையரும் அல்லர்; பழிக்கும் நானுராதலான். (எ-று)

அரசனோடொத்த மறைந்த குற்றமுடையாரைத் தேறலாம், அவர் தம் குற்றம் மறைக்கு மாறு போல அவர் குற்றமும் மறைப்பர் ஆதலான் எ ன் ப து மகேச்சுரர் மதம். அது குற்றமென்று கூறப்

பட்டது, 2.

503 கா தன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல்

பேதைமை யெல்லாந் தரும்.

(இ ஸ்) அன்புடைமையே பற்றாக, அறிவுடையாரல்ல தாரைத் தேறுதல், எல்லா அறியாமையும், தரும் (எ-று).

அரசர் அன்புடையாரைத் தேறலாமென்பது பராசரர்மதம். இஃது, இவ்வளவினால் தேறலாகாதென்றது.

5.04. தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை

தீரா விடும்பை தரும்.

(இ-ள்) பிறனை ஆராயாதே வழிமுறையென்று தெளிந் , வனுக்கு அத்தெளிவு, தீர்தலில்லாத துன்பமுண்டாகும், (எ-று)

வழிமுறை என்றது தன்வழியின் உள்ளார்க்கு அவன் வழியின் உள்ளார் அமாத்தியராய்ப் போந்த முறைமை. தன் குலத்திலுள் ளாருள் அமாத்தியராயினார் வழியில் உள்ளாரைத்தேறலா மென் பது வியாதன் மதம். அது குற்றமென்று இது கூறப்பட்டது. 4

305. தேரான் றெளிவுந் தெளிந்தான் கணையுறவுந்

தீரா விடும்பை தரும்.

(இ-ள்) (ஒருவனை) ஆராயாது தெளிதலும் தெளிந்தபின்பு ஐயுறுதலும் தீர்தலில்லாத துன்வத்தைத் தரும், (எ-று).