பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155

13. தெரிந்து தெளிதல்

5.01. அறம்பொரு னின்ப முயி சச்ச நான்கின்

றிறந்தெரிந்து தேறப் படும்.

(இ-ஸ்) அறமும் பொருளும் இன்பமும் உயிரச்சமுமென்னும் நான்கினையும் கூறுபார்த்து ஆராய்ந்து பின்பு தேறப்படும் (எ-று) .

மேற்கூறிய குற்றமும் குணமும் ஆராய்தலேயன்றி அறத்தை வேண்டியாதல், பொருளை வேண்டியாதல் இன்பத்தை வேண்டிய யாதல், அச்சம் உளதாம் என்றாதல் அரசன் மாட்டுத்ைேமயை வினையாமையை ஆராய்ந்து பின்பு அவரைத் தேறப்படும் என்று கூறப்பட்டது. 9

510. தேறற்க யாவரையுந் தேராது தேர்ந்த பிற்

றேறுக தேறும் பொருள்

(இ-ஸ்) யாவரையும் ஆராயாது தெளியாதொழிக, ஆராய்ந்த பின்பு அவராற்றேறப்படும் பொருளைத் தேறுக, (எ- று)

மேல் நாலுபொருளையும் ஆராய வேண்டும் என்றார்; அந் நாலினும் ஒரோர் பொருளில் தேறமுடியாமை அவரவர் பொருளிலே தெளிக, எல்லாப்பொருளினும் தெளிக. 1 O