பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

14. தெரிந்து வினை யாடல்

இது, பெரும்பான்மையுஞ் சேனாதிபதியை நோக்கிக் கூறிற்று 7

518. வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக

நினைப் பானை நீங்குந் திரு.

(இ-கள்) வினையிடத்து வினைசெய்ய வல்லவனது நட்பை வேறாக நினைக்கும் அரசனைத் திருமகள் நீங்குவள், (எ-று)

இது வினை செய்ய வல்லாரை அருள் பண்ண வேண்டும் என்பது உம் அவருடன் மாறுபட ஒழுகின் பொருள் கேடுவறும் என்பது உம் கூறிற்று. -- 8

5 19. தாடோறு நாடுக மன்னன் வினை செய்வான்

கோடாமை கோடா து லகு.

(இ-ள்) வினைசெய்வான் கோடா தொழிய உலகம் கோடாது செவ்வையிலே நிற்கும்; ஆதலான் அவன் செயலை நாடோரும் ஆராய்க மன்னவன், (எ-று)

இது வினைசெய்வார் செயலை நாடோறும் ஆராயவேண்டு மென்றது. முறை செய்வான் என்றதனால், அற ஆராய்ச்சி செய் வாரை நோக்கி ற்றே ஆயினும் ஏனை அமாத்தியர் (வினை) செய்தல் தொழில் உடைய ராதலால் (அவ்வமாத்தியரை நோக்கிற்று.) 9

520. எனை வகையாற் றேறியக் கண்ணும் வினை வகையான்

வேறாகு மாந்தர் பலர்.

(இ-ள்) எல்லா வகையினாலும் ஆராய்ந்து தெளிந்தவிடத் திலும், அவர் செய்யும் வினையின் வகையினாலே மனம் வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர், (எ-று) .

இது, தெளிந்தே மென்று இகழலா காதென்ற து . 1 O

  • இது மணக்குடவருரை