பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

16. பொச்சாவாமை

பொச்சாவாமையாவது மறவியின்றி யொழுகுதல். அது எவ் விடத்தெனின் தனது சோர்வு பார்த்துப் பிறர் வஞ்சகஞ் செய்யுமிடங் களினும், அறம் பொருளின் பங்கள் .ெ ச ய் ய வேண்டுமிடங்களினும் மறத்தலின் மை. பொச்சாப்பு எனினும் மறவி எனினும் இகழ்ச்சி எனினும் ஒக்கும். மேல் அமாத்தியர் மாட்டும் சுற்றத்தார் மாட்டும் ஒழுகும் திறன் கூறினார். அதனாற்பயன் உண்டாவது தன்னைத் தான் கடைப் பிடித்து ஒழுகின் என்று அதன்பின் கூறப்பட்டது.

5 31. பொச்சாப் பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்

தெப் பானு லோர்க்குந் துணிவு.

(இ-ள்) பொச்சாப்பு உடையார்க்குப் புகழுடைமையில்லை யாம்; அஃது உலத்து வழங்குகின்ற எவ்வகைப்பட்ட நூலோர்க்குத் துணிவு, (எ-று).

இது, பொச்சாப்பாகாதென்றது. 1

532. இகழ்ச்சியிற் கெட்டாரை யெண்ணுக தாந்த

மகிழ்ச்சியின் மைந்து றும் போழ்து.

(இ-ள்) அ ர சர் குறித்துணரும் உணர்ச்சியின்மையானே முன்பு கெட்ட அரசரை நினைக்க, தாமும் தம்முடைய மகிழ்ச்சி யாலே வலிதாயிருக்கும் பொழுது, (எ-று).

இதனாற் சொல்லியது வலியாரைப் பகைவர் வெல்லுங்கால் அவரைச்சோர் வு பர்த்துக் களவினால் கொல்வர்; ஆதலால் தன் வலியை நினை யாது பகை உண்டாகும் என்று நினைத்துக் கோயி லு:ம் அந்தப்புரமும் நிர்விளையாட்டு ஆடும் இடமும் இளமரக்காவும் வேட்டையாடும் காடும் உண்பனவும் பூசுபனவும் இ க ழ து சோதித்துக் கொள்க என்றது. 2

533. அச்ச முடையார்க் கரணில் லை யாங்கில்லை

பொச்சாப் புடைய சர்க்கு நன்கு.

(இ-ள்) அச்சமுடையார்க்கு அவ்வச்சம் தீர்க்கவல்லதோர் அரணில்லை; அது போலப் பொச்சாப்புடையார்க்கு வருவதொரு தன்மை இல்லை, (எ-று)