பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.65

17. செங்கோன் மை

செங்கோன்ம்ையாவது செவ்விதாகிய முறைசெய்தலுடைமை. குற்றமும் குணமும் தூக்கித் பார்த்தலாற் கோல் என்றார்; அது கோடாமையால் செங்கோல் ஆயிற்று. மேல் அமாத்தியர் மாட்டுஞ் சுற்றத்தார் மாட்டுந் தன் மாட்டுஞ் செய்யுந்திறங் கூறினார்; இஃது உலகத்தார்மாட்டுச் செய்யுந்திறன் கூறுகின்றதாகலின், அதன்பின் கூறப்பட்டது.

541. ஒர்ந்துகண் ணோடா திறைபுரீத் தியார்மாட்டுத்

தேர்ந்துசெய் குவதே முறை.

(இ-ள்) ஒருவன் செய்த குற்றத்தை ஆராய்ந்து, தட்டோரென்று கண்ணோடா, தலைமையைப் பொருந்தி, யாவர் மாட்டும் குற்றத் திற்கு தக்க தண்டத்தை நூல்முகத்தானா ராய்ந்து, செய்வது முறை யென்று சொல்லப்படும், (எ-று).

யார்மாட்டும் என்றது தன் சுற்றமாயினு மென்றது. இறை புரிதலாவது சுற்றம் என்று கண்ணோடாத அரசனாயிருத்தல். இது செங்கோன்மையாவது இத்தன்மைத்து என்று கூறிற்று. l

542. குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடி தல்

வடுவன்று வேந்தன் குெழில்.

(இ-ள்) குடிகளை நலியாமற் காத்து ஓம்புதற்காகக் குற்றஞ் செய்தாரை ஒறுத்தல் குற்றமன்று; அரசன் தொழில் (எ-று

ஒம்ப என்று திரிக்க. பிறர்க்கு இன்னாசெய்தல் அறம் அல்ல என்றார் ஆகலின், ஈண்டுக் கூறுகின்றது அறம் அல்லவாம் பிற என்று ஐயுற்றார்க்குக் கூறப்பட்டது. 2. ‘

543. கொலையிற் கொடியாரை வேத்தொறுத்தல் பைங்கூழ்

கனைகட் டதனொடு தேர்.

(இ-ள்) கொடுமை செய்தாரைக் கொலையினானே அரசன் ஒறுத்தல் குற்றமன்று; உழவன் பைங்கூழ் வளர்தற்குக் கவர் களை களைந்ததனோடு ஒக்கும், (எ-று).