பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

17. செங்கோன் மை

கொடியா ராவார்கள் பலர்: லைப்பார் கறை கொள்வார்

-- +2} குறை

இவர்கள் போல்வார். பிறரைக் கொல்லாத ரைக் கொல்லுதல் நீதி அன்று ஆயினும் கொடியாரைக் கொல்ல வேண்டும் என்றது. 5

544. வானோக்கி வாழ முலகெல்லாம் மன்னவன்

கோனோக்கி வாழுங் குடி

(இ-ள்) உலகத்துயிரெல்லாம் மழையை நோக்கி யின் புறா நிற்கும் அதுபோலக் குடிகளும் அரசன் செங்கோன்மையை நோக்கி யின்புறுவர், (எ-று) .

இது முறை செய்தல் குடி மக்கட்கு இன்றியமையாது என்பது கூறிற்று. 4.

545 , குடி த ஜீஇக் கோலோச்சு மாநில மன்ன

ை த ஜீஇ திற்கு முலகு.

(இ-ள்) குடியைப் பொருந்தி முறைமையைச் செலுத்துகின்ற பெரிய நில மன்னனது அடியைப் பொருந்தி நிற்கும் உலகு, (எ-று)

இது, முறைமை செய்யும் அாசன் கண்ணதாம் உலகு என்றது 5

546 இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட

பெயலும் விளையுளுந் தொக்கு.

(இ=ள்) நூல் சொன்ன முறையினானே முறைமையை நடத்த வல்ல அரசனது நாட்டாம் மழைபெய்தலும் விளைதலுங்கூட (எ-று)

மேற்கூறிய முறைசெய்ய மழையும் விளைவும் உண்டா மென்றது. 6

547. அந்தணர் நாற்கு மறத்திற்கு மாதியாய்

நின்றது மன்னவன் கோல்.

(இ-ள்) அந்தணரதாகிய வேதத்திற்கும் அதனால் கூறப் பட்ட அறத்திற்கும் முதலாய் நின்றது அரசன் செய்யும் முறைமை, (எ று).