பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169

18. கொடுங்கோன்மை

(இ-ள்) பசுக்கள் பால் குறையும், அந்தணர் வேதம் ஒதார்; அரசன் காவானாயின், (எ.று).

இது, காவாமையால் வருங் குற்றங் கூறிற்று. 4.

555. முறைகோடி மன்னவன் செய்யி னுறை கோடி

யொல்லாது வானம் பெயல்.

(இ-ள்) முறைமைகோட மன்னவன் செய்வனாயின் , மழை துளிவிடுதலைத் தவிர்ந்து பெய்யாதொழியும், (எ-று).

இது முறைமை கோடினால் வரும் குற்றம் கூறிற்று. 5

556. கூழுங் குடிய மொருங்கிழக்குங் கோல்கோ டி ச்

சூழாது செய்யு மர சு.

(இ-ள்) பொருளையும் பொருள்தரும் குடியையும் கூட இழப் பன், முறை கோடி ஆராயாமல் செய்யும் அரசன் , (எ-று).

இஃது ஆராயாது செய்வதனால் வருங் குற்றங் கூறிற்று 6

557. கொலை மேற்கொண்டாரிற்கொடி தேயலை மேற்கொண்

டல்லவை செய்தொழுகும் வேந்து.

(இ-ள்) கொலைத்தொழிலை மேற்கொண்டவரினும் கொடி யன், அலைத்தற்றொழிலை மேற்கொண்டு நீதியல்லாதன செய்து ஒழுகுகின்ற அரசன், (எ-று). 7

558. துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்த

னளியின்மை வாழு முயிர்க்கு

(இ-ள்) * உலகத்திற் பல்லுயிர்க்கும் மழையில்லையானால்

வருந்துன்பம் எத்தன்மைத்தாகின்றது, அத்தன்மைத்து; அரசன் அருளிலனாதல் அவன் கீழ்வாழும் மக்கட்கு, (எ-று).

இஃது அருள் செய்யாமையால் வருங் குற்றங் கூறிற்று 8

இது மணக்குடவருரை