பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171

19. வெருவந்த செய்யாமை

561, தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தா

லொத்தாங் கொறுப்பது வேந்து.

(இ-ள்) குற்றத்துக்குத் தக்கவை ஆராய்ந்து, ஒருவர் மேற் செல்லாமைக் காரணமாக உலகத்தார்க்குப் பொருந்துமாறு ஒறுப் பவன் அரசன், (எ-று).

இது செங்கோன்மையன்றோ எனின் ஒக்கும் முறை செய்யுங்க ால் அரசன் வெகுட்சியுடையனாய் உலகத்தார் அஞ்சு மாறு செய்யாது இம்முறை செய்யாக்கால் ஒருவர் ஒருவரை அடர்ப்பர் என்று உல கத்தார் தாமே இசையச் செய்யவேண்டும் என்றற்கு வேறுபடுத்துக் கூறப்பட்டது. இவ்வாறு செய்தல் வெருவந்த செய்யாமை என்றது.

562. கடிதோச்சி மெல்ல வெறிக தெடி தாக்க

நீங்காமை வேண்டு பவர்.

(இ-ள்) கடிதாகச் செய்வாரைப் போன்று மெல்லிதாகச் செய்க. நெடித க வருகின்ற ஆக்கம் நீங்காமையை வேண்டுவார். (எ-று) .

இது, குற்றத்திற்குத் தக்க தண் டத்தினும் குறையச் செய்ய வேண்டுமென்றது. இனிவெருவந்த செய்ததனால் உளதாகும் குற்றம் கூறுகின்றனர். 2

563. கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோ லது வல்ல

தில்லை நிலக்குப் பொறை.

(இ-ள்) கடுங்கோலனாகிய அரசன் அறிவில்லாசை அமைச்ச சாகக் கூட்டிக்கொள்ளும்; அவ்வரசன் அல்லது நிலத்துக்குப் பாரம் வேறொன்றும் இல்லை, (எ-று).

அறிவில்லாதார் அமாத்தியர் ஆனால் அவரானே உலகம் அச்சமுறும்; அதற்காகக் கடுங்கோலரசன் அவரைக் கூட்ட அவனை நிலம் பொறாது என்றது.

5 ல் 4. இறைகடிய னென்றுரைக்கு மின்னாச்சொல் வேத்த

னுறைகடுகி யொல்லைக் கெடும்.