பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

20. கண்ணோட்டம்

கண்ணோட்டமாவது கண்ணாற் காணப்பட்டாரை யருள் செய்தல். குற்றஞ்செய்தாரை ஒறுக்குங்கால் உலகத்தாரிசைய ஒறுக்க வேண்டு மென்றாராயினும் அவ்வாறு செய்தவரைத் தமது கண்முன் னாகக் கண்டால் அதனைப் பொறுத்தலும் வேண்டுமென்று அதன் பின் கூறப்பட்டது. இது பெரும்பான்மையும் முன்பு கண்டு பழகி னார் மேற்று.

571. கண்ணோட்ட மென்னுங் கழிபெருங் காரிகை

யுண்மையா னுண்டிவ் வுலகு.

(இ-ள்) கண்ணோட்டமாகிய பெரிய அழகு அரசன் மாட்டு உண்டானபடியினாலே உலக நடை உண்டாகின்றது. (எ-து).

இஃதில்லையாயின், உலகங்கெடும்; ஆதலால், கண்ணோட்டம் வேண்டுமென்றது. செங்கோன்மை கூ று கி ன் ற வழிக் கண் னோ டாது முறைசெய்க என்று கூறி ஈண்டுக் கண்ணோடுக என்று கூறுதல் மாறுபடக் கூறுதலாம் பிறவெனின், அற்றன்று; அது முறைசெய்யும் திறன் கூறிற்று, இஃது உலகத்தார் பலராதலாங் குற்றம் செய்வார் மிகுந்திருப்பர்; அதற்கெல்லாம் தண்டம் செய்யின் உலகம் என்பது ஒன்று இல்லையாம்; அதற்காகப் பொறுக்க வேண்டுவன பொறுக்க வேண்டும் என்று கூறிற்று. I

572. ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்

பொறுத்தாற்றும் பண்பே தலை .

(இ-ள்) தம்மை யொறுத்துச் செய்யும் இயல்பு ைடயார் மாட்டும் கண்ணோடிப் பொறுத்துச் செய்யும் குணமே தலையான குணம், (எ-று)

அன்றியும் ஒறுத்துச் செய்யவேண்டும் இயல்பினை உடை யார் மாட்டும் என்றும் ஆம். உம்மை சிறப்பும்மை. பிறர்க்குக் குற்றம்

செய்தா ரையே அன்றித் தமக்குக் குற்றம் செய்தாரையும் பொறுக்க வேண்டும் என்றது. 2