பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

20. கண்ணோட்டம்

உ. ம் ைம ஐயத்தின் கண் வந்தது. கண் உண்டாயின், நோக்குமாயின் வந்து நிலைமையைக் கண்டு கண்ணோடும்; ஆதலான் கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணிலர் என்று மிகுத்துக் கூறிற்று. {j

577. பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்

கண்ணோட்ட மில்லாத கண்.

(இ-ள்) பண் என்ன பயனுடைத்தாம், பாடலோடு பொருந் தாதாயின் அதுபோலக் கண் எ ன் ன பயனுடைத்தாம், கண் ணோட்டமில்லாத காலத்து, (எ-று).

பாடலாவது பாடுதல் தொழில்; அஃதாவது மந்தம் உச்சம் சமம் குடிலம் முதலாயின. அதனொடு பொருத்தமின்மையாவது எடுத்துக்கொண்ட பண் இவ்விடங்களில் ஒவ்வாது நின்று கேட் டாற்கு இன்பம் பயவாமை.

இது, பிறர்க்கு இன்பம் பயவாதென்றது. 7

578. உளயோன் முகத்தெவன் செய்யு மளவினுற்

கண்ணோட்ட மில்லாத கண்.

(இ-ள்) அவரவர் வாழ்வு காரணமாகக் கண்ணோடுதலைச் செய்யாத கண்கள், முகத்து உளபோன்று தனக்கென்ன பயனைத்

தரும்? (எ-று).

அளவென்றது தகுதியை. இது தனக்கும் பயன்படா தென்றது.

579. கண்ணிற் கணிகலங் கண்ணோட்ட ம.தின்றேல்

புண்ணென் றணரப் படும்.

(இ-ள்) கண்ணிற்கு அழகு செய்யும் அணிகலனாவது கண் னோட்டமுடைமை; அஃதில்லையாயின், அவையிற்றைப் புண் னென் றறியப்படும், (எ-று).

இது, கண்ணோட்டமில்லாத கண்ணிற்குப் பெயர் கூறிற்று 9