பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177

20. கண்ணோட்டம்

580. மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ

டி யைந்துகண் ணோடா தவர்.

(இ-ள்) சுதை மண்ணோடு கூடச்செய்த மரப்பாவையோடு ஒப்பர்; ஒருவன் கண்ணோடு தங்கண் கலந்தபின்பும் கண்ணோட் டத்தைச் செய்யாதவர், எ-று).

இது, கண்காணாமை பாவைக்கும் ஒக்கும், இது மகனல்லன் என்றது. 10

பங்கயங்_க

21. ஒற்றாடல்

ஒற்றாடலாவது ஒற்றரையாளவேண்டுமென்பதும், அவ் வொற்றர் திறனும் கூறு த ல். பெரியாரைத் துணைக்கோடல் முதலாகக் கண்ணோட்டம் ஈறாகத் தன் அரசிலிருந்து செய்ய வேண்டுவன கூறினார். இது செய்யுங்கால் அவரவர் செய்தியை ஒற்றரான் ஒற்றியறியவேண்டுதலானும், இனி அவர் பிறர் நாடு கொள்ளுங்கால் செய்யவேண்டுவன கூறுகின்றாராதலின் அந்நாட்டி யல் பறிந்து வினைசெய்ய வேண்டுதலானும் இவ்வதிகாரம் வேண் டப்பட்டது.

581. ஒற்று முரை சான்ற நாலு மிவையிரண்டுத்

தெற்றென்க மன்னவன் கண்.

(இ-ள்) ஒற்றினையும் உரையமைந்த நூலினையும் தெளிய

வறிக மன்னவன்; இவையிரண்டும் கண்களாதலான், (எ-று).

மறைந்தவைகானுங்கால் ஒற்றரானாதல் நூலினானாதல் 4 - 6 வேண்டுமாதலின் அதற்காக இரண்டினையும் தெளிய அறிக;

1. முறைசான்ற என்பது மணக். பாடம்