பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

23. மடியின்மை

இது மடியில்லார்க்குப் போக்கலாமென்றது.

6 10. மடியிலா மன்னவ னெய்து மடியளத்தான்

றாஅய தெல்லா மொருங்கு.

(இ-ன்) மடியில்லாத மன்னவன் எய்துவன், அடியினால் அளந்தானால் கடக்கப்பட்ட வுலகமெல்லாம் கூட (எ-று).

இது, மடியின்மையால் வரும் பயன் கூறிற்று. 10

24. ஆள்வினையுடைமை

ஆள்வினை யுடைமையாவது முயற்சியுடைமை. செய்யுங் காரியம் உயர நினைத்துச் சோம்புதல் இலராயிருந்தாலும் அதனை முடியுமாறு முயலவேண்டுதலின், அதன் பின் கூறப்பட்டது.

61.1. இன்பம் விழையான் வினைவிழைவான் றன்கேளிர்

துன்யத் துடைத் துரன்றுத் துரண்.

(இ-ள்) தன்னுடம்பிற்கு இன்பத்தை விரும்பாது வினை செய்தலை விரும்புமவன், தன் கேளிர்க்கு உற்றதுன்பத்தை நீக்கி அவர் தளராமல் தாங்குவதொரு துானாம், (எ-று).

ஆதலால், வருத்தம் பாராது முயலவேண்டு மென்றது. I

612. அருமை படைத்தென் றசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்.

(இ-ள்) ஒரு வினையைச்செய்தல் அருமையுடைத்தென்று முயலாமையைத் தவிர்தல் வேண்டும்; முயற்சி தனக்குப் பெருமை யைத் தருமாதலால், (எ-று).