பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187

24. ஆள்வினையுடைமை

இது, வினைசெய்து முடித்தல் அருமையுடைத்தென்று தவிர் தலா கா தென்றது. 2

613. வினைக்கண் வினைகெட லோம்பல் வினைக்குறை

தீர்ந்தாரிற் றீர்ந்தன் றுலகு.

(இ-ள்) வினை செய்யுங் காலத்து வினைகெடுதலைத் தவிர்க; வினைக் குறையை முடித்தாரினின்றும் உலகம் விடப்பட்டதில்லை (எ-குறு).

இது, தொடங்கின வினை யைக் குறைபட வி ட ல ள க ா தென்றது. 35

6 14. மடியுளாண் மாமுகடி யென்ப மடியிலான்

றாளுளா டாமரையி னாள்.

(இ-ள்) வினை செய்யுங்கால் சோம்புவானது சோம்பலின் கண்ணே மூதேவி உறைவாள்; அதனைச் சோம்பின்றி முயலுவான்

முயற்சிக் கண்ணே திருமகள் உறைவாளென்று சொல்லுவர். (எ-று)

இது, வினையை மடியின்றிச் செய்யவேண்டு மென்றது. 4.

615. தாளாண்மை யில்லாதான் வேளாண்மை பேடிகை

வாளாண்மை போலக் கெடும்.

(இ-ள்) முயற்சியில்லாதான் பிறர்க்கு உபகரித்தல், பகை கண்டா லஞ்சுமவன் கையில்வா ள் பிடித்தாற்போலக்கெடும், (எ-று)

இஃது அறம் செய்யமாட்டானென்றது. 5

618. முயற்சி திருவினை யாக்கு முயற்றின்மை

யின்மை புகுத்தி விடும்.

(இ-ஸ்) முயற்சி செல்வத்தினை உண்டாக்கும்; முயலாமை வறுமையை உண்டாக்கிவிடும், (எ-று).

செல்வமும் நல்குரவும் இதனானே வருமென்றது. 6