பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189

25. இடுக்கணழியாமை

இடுக்கணழியாமையாவது யாதானும் ஒரு துன்பம் வந்துற்ற காலத்து அதற்கு அழியாமை. வினை செய்யுங்காலத்தினை முடிவு செய்வதன் முன்னம் சில இடையூறு வரும்; வந்தால் அதனைப் பொறுத்துச் செய்கின்ற வினையை முற்ற முயல வேண்டுமென்று அதன்பின் கூறப்பட்டது.

6 21 . இடுக்கண் வருங்கா னகு க வதனை யடுத்தார்வ த.தொப்ப தில் .

(இ-ள்) தனக்குத் துன்பம் வத்த காலத்து அதனை இகழ்ந்து நகுக; அத்துன்பத்தை மேன்மேலும்

அடர்க்க வல்லது அந்நகுதல் போல்வது பிறிதில்லை, (எ-று).

இஃது. இடுக்கணுக்கு அழியாமை வேண்டுமென்றது. 1

622. இன்பம் விழையா திடும்பை யியல்பென் பான்

றரன்ப முநரத லிலன்.

(இ-ள்) இன்ப முறுதலை விரும்பாது இடும்பை யுறுதலை இயல்பாக கொள்ளுமவன் . துன்ப முறுதல் இலன் (எ-று) .

இது, இடுக்கனை யியல்பாகக் கொள்ள வேண்டுமென்றது 2

623. இடும்பைக் கிடும்பை படுப்ப ரிடும்பைக்

கிடும்பை படாஅ தவர்.

(இ- ள்) துன்பத்துக்குத் துன்பத்தைச் செய்வார், அத்துன் பத்துக்குத் துன்ப முறாதவர். (எ-று).

இது. பொறுக்க வேண்டு மென்றது. இ ைவ மூன்றும்

பொதுவாகக் கூறப்பட்டன. H

6.24. மடுத்தவா யெல்லாம் பகடன் னா னுற்ற

விடுக்க ணரிடர்ப்பா டுடைத் து