பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

2. அமைச்சியல்

1. அமைச்சு

அமைச்சாவது அமைச்சர் செய்யுந் திறன் கூறுதல். அஃது யாங்வனம் கூறினார் எனின் அது கூறிய அதிகாரம் பத்தினும் முற் பட அமைச்சர்க்கு இன்றியமையாக் குணங்களெல்லாம் ஓரதிகாரத் தானும், வாத மண்டலத்திலிருந்து செய்யவேண்டுவன நாலதிகாரத் தானும், புறமண்டலத்தி ல் போம் துாதர் இலக்கணம் ஓரதிகாரத் தானும், அவர் செய்யுந்திறன் நான்கதிகாரத்தானுங் கூறினா சென்று கொள்ளப்படும். மேல் அரசர் செய்யுந் திறன் கூறினார். இனி ஒருவினையைச் செய்து முடிக்குங்கால் அமைச்சர் வேண்டுத லின், அதன்பின் கூறப்பட்டது.

3ே1. வன்கண் குடிகாத்தல் கற்றறித லாள் வினையோ

டைத்துடன் மாண்ட தமைச்சு.

(இ-ள்) அஞ்சாமையும் குடிப்பிறத்தலும் இந்திரியங்களைக் காத்தலும் நூல்முகத்தானறிதலும் முயற்சியும் என்னும் ஐந்துங் கூட மாட்சிமைப்பட்டவன் அமைச்சனாவான், (எ-று).

இவை அமைச்சனாவதன் முன்னே வேண்டுமாதலின், முற்

I

கூறப்பட்டன.

632. மதிநுட்ப நாலோ டுடையார்க் கதினுட்பம்

யாவுள முன்னிற் பவை.

(இ-ள்) மேற்கூறிய நூற்கல்வியோடுகூட துண்ணிதாகிய மதியினையும் உடையார்க்கு அதனினும் நுண்ணியவாய் மாற்றன ராலெண்ணப்பட்டு எதிர் நிற்கும் வினைகள் யாவுள? (எ-று)

இது மேற்கூறியவற்றோடு மதியும் வேண்டு மென்றது. 2

3ே3. அறனறிந் தான்ற மைந்த சொல்லானெஞ்ஞான்றுந்

திறனறிந்தான் றேர்ச்சித் துணை.