பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

2 அமைச்சியல்-1. அமைச்சு

(இ-ள்) செயத்தகுவன அறிந்த விட க்தும், அது செய்யுங் கால் உலகத்து நடை அறிந்து செய்க, (எ-று).

உலகநடை அறிதலாவது அரசன் சீலமும் பரிவாரத்திலுள் ளார் நிலைமையும் அறிதல். இவையிற்றையறியாது செய்யிற் குற்றமென்றவாறு ஆயிற்று. 7

638. அறிகொன் றறியா னெனினு முறுதி

யுழையிருந்தான் கூறல் கடன்.

(இ-ள்) அரசன் அமைச்சன் கூறிய பொருளை யறிக; அவன் ஒன்றறியானாயினும், அவனுக்கு உறுதியாயினவற்றை அருகிருத்த அமைச்சன் சொல்லுதல் கடன் (எ-று).

அரசன் கேளானென்று சொல்லாதொழித லாகாது. இத் துணை யும் அமைச்சரிலக்கணம் கூறப்பட்டது. &

6.39. முறைப்படச் க, ழ்ந்து முடி விலவே செய்வர்

திறப்பா டிலாஅ தவர்.

(இ-ள்) அடைவுபட எண்ணியும், தம்மால் முடிதல் இல்லாத வற்றைச் செய்யா நிற்பர்; வினைசெய்யுந் திறன் இல்லாதார், (எ-று)

இஃது எண்ணவல்லாராய் வினை செய்ய மாட்டாதாரும் உளரென்று கூறிற்று. 9

640. If ழதெண்ணு மந்திரியிற் பக்கத்துட் டெவ் வ

ரெழுபது கோடி யுறும்’

(இ-ள்) குற்றப்பட எண்ணும் அமைச்சனில் எழுபதுகோடி மடங்கு நல்லர், உட்ப்கையாய்த் தன் னருகிலிருப்பவர் (எ-று).

இவனைப் போல் அவர்கள் செறுக்க மாட்டார் என்றவாறு ,

இவை யிரண்டும் மந்திரிகள் ஆகாதாரது இலக்கணங் கூறின. 10

_ _ _

1 . தலை என்பது மணக். பாடம்.