பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

3. வினைத்துாய்மை

658. அழக்கொண்ட வெல்லா மழப்போ மிழப்பினும்

பிற்பயக்கு கற்பா லவை.

(இ=ள்) பிறர் (அழக்)கொண்ட பொருள்களெல்லாம் தாமும் அழப்போம்; அவ்வாறன்றி நற் பகுதியால் கொண்ட பொருளை இழந்தாராயினும், பின்பு பயன்படும், (எ-று).

இது, தேடின பொருள் கெடுமென்றது. 8

5ே9. சலத்தாற் பொருள் செய்தே மாத்தல் பகமட்

கலத்துணிர் பெய்திரீஇ யற்று.

(இ-ள்) வஞ்சத்தாலே பொருள் தேடி மகிழ்ந்திருத்தல், பசு மட் கலத்திலே நீரை முகந்துவைத்த தன்மைத்து, (எ-று).

இது, தானும் பொருளுங் கூடிக் கெடுமென்றது. 9

6 60. பழிமலைத் தெய்திய வாக்கத்திற் சான்றோர்

கழிதல் குரவே தலை .

(இ~ள்) பழிப்பினாலே மிகுதியாக எய்து கிற ஆக்கத்தினும், சசன்றோர்க்குப் பெறுமிடியே தலை, (எ-று). 10

4 - வினைத்திட்பம்

வினைத்திட்பமாவது வினையின்கண் திண்ணியராதல். மேல் நல்வினை செய்யவேண்டுமென்றார்; அது செய்யுங்கால் திண்ணிய ராச் செயல் வேண்டுமாதலின், அதன் பின் கூறப்பட்டது.

6 61. எண்ணிய வெண்ணியாங் கெய்து ப வெண்ணியார்

திண் கைசிய ராகப் பெறின்.