பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205

5. வினை செயல்வகை

எச்சம்-சேஷம். இது, வினைசெய்யுங்கால் சிறிதொழியச் செய் தோமென்று விடலா காதென்றது. ஈண்டுப்பகை கூறியது என்னையெனின் வினைசெய்வார் பகைவர் மாட்டு ஆதலான் அவரைச் சிறியர் என்று இகழாமையும் வேண்டும் ஆதலான் ஈண்டுக் கூறப்பட்டது. 3

674. ஒல்லும்வா யெல்லாம் வினை நன்றே பொல் லரக்கா ற்

செல்லும்வாய் நோக்கிச் செயல்.

(இ-ள்) இயலும் இடமெல்லாம் வினைசெய்தல் நன்று; இய

லாத காலத்து அதனை நினைந்திருந்து, இயலும் இடம் பார்த்துச் செய்க, (எ-று)

மேல் பகை எஞ்சவிடலாகாது என்றார்; அதுமுடியாத காலத் துச் செய்யுமாறென்னை என்றார்க்கு அதனை இகழாது பின்பு காலம் பார்த்துச் செய்க வென்றது. 4

6.75. உறைசிறியா ருண்ணடுங்க லஞ்சிக் குறையெறிற்

கொள்வர் பெரியார்ப் பணிந்து.

(இ-ள்) உறையும் இடம் சிறியார் தமது இடன் நடுங்கு தற்கு அஞ்சித் தமது குறைதீரப்பெறின், தம்மின் பெரியாரைத் தாழ்ந்து, நட்பாக க் கொள்வர், (எ-று).

இது சிறியனாயின் இவ்வாறு செய்ய வேண்டுமென்றது. இவையெல்லாம் அரசர்க்கும் ஒக்கச் செய்ய வேண்டுமாயினும் அமைச்சுத் தொழில் ஆதலான் ஈண்டுக் கூறப்பட்டன. 5

8 76. நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே

யொட்டாரை யொட்டிக் கொளல்.

(இ-ள்) தஞ் சுற்றத்திற்கு நல்லவை செய்தலினும், பகை வரைப் பொருந்தி நட்பாகக் கொள்ளுதலை விரைந்து செய்ய வேண்டும் (எ-று).

இது, சுற்றத்திற்கு நல்லவை செய்தலினும், வேண்டுவன விரைந்து செய்யவேண்டும் அன்றே அதனினும் பகைகொள்ளாமை