பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

5. வினை செயல்வகை

விரைந்து செய்தல் வேண்டும், அவரும் தம்மோடு ஒத்தவலியுடைய ராயின் (எ-று). 5

677. முடிவு மிடையூறு முற்றியாங் கெய்தும்

படு பயனும் பார்த்துச் செயல்.

(இ-ள்) வினை தொடங்கினால் அது முடியும் வண்ணமும்,

அதற்கு வரும் இடையூறும், முடிந்த இடத்துண்டாகும் பயனும் முன்பே அறிந்து வினை செய்க, (எ-று).

முடிவு-மேற்கூறியவற்றால் செய்யுங்கால் முடியும் முடியாது என்றறிதல். இடையூறு பகைவர்க்கு வ ரு ம் படைத்துணை, முற்றியாங்கெய்தும் படுபயன்-நேரும் இடையூறு சிறிதாய்ப் பெறும் பொருள் பெரியதாயினும் அதன் பின்பு விளையும் விளைவு. இது வெற்றிப்பகை தோற்றுதல். 7

678, செய்வினை செய்வான் செயன்முறை யவ்வினை

யுள்ளறிவா லுள்ளங் கொளல்.

(இ=ள்) செய்யத்தகும் வினையைச் செய்யுமவன் செய்யும் முறைமையாவது, அவ்வினையினது உளப்பாடு அறிவானது உள்ளத்தைக் கூட்டிக்கோடல்.

உள்ளங்கொளல் என்றது உண்மை (யறிந்தவர் முன்னரேயு) ளர் என்றற்கு. இது வினைசெய்யுங்கால் அவ்வினையை முன்பு அறியுமவர்களைக் கொள்ளவேண்டும் என்றது. &

679. வினையால் வினையாக்கிக் கோட னனைகவுள்

யானையால் யானையாத் தற்று.

(இ-ள்) ஒரு வினையாலே பிறிதொரு வினையைச் செய்து கொள்க; அது மதயானையோடே மதயானையைப் பிணைத்தாற் போலும், (எ-று)

நனை கவுள் எனபதனை இரட்டித்துக் கூட்டித் தனக்கு ஒரு பகைவர் தோன்றினால் அவர்க்குப் பகையாயினாரை அவரோடு பகைக்குமாறு பண்ணுக, அவர் தம்முள் தாம் பொருதல்லது தம்பக் கல் வருவாரில்லை யென்றவாறாயிற்று. 9