பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

211

7. மன்னரைச்சேர்ந்தொழுகல்

மன்னரைச் சேர்ந்தொழுகலாவது அரசர்மாட்டு அ மாத்தியர் ஒழுகுந்திறன் கூறுதல். இது முதலாக அவையஞ்சாமை ஈறாகக் கூறுகின்றவை தம்மரசர்மாட்டு வேண்டுமாயினும், மாற்றரசர் மாட்டும் வேண்டுதல் இன்றியாமையாத சிறப்புடைத்தாதலின், அதன்பின் இது கூறப்பட்டது.

591. குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில

வேண்டுய வேட்பச் சொலல்.

(இ-ள்) அரசன் குறிப்பையறிந்து, காலம் பார்த்து, வெறுப் பில்லாதனவாய்ச் .ெ சா ல் ல வேண்டுவனவற்றை விரும்புமாறு சொல்லுக, (எ-று).

இது, சொல்லுந் திறன் கூறிற்று.

692. வேட்பன சொல்லி வினையில வெஞ்ஞான்றுங்

கேட்பினுஞ் சொல்லா விடல்.

(இ-ள்) வேந்தனால் விரும்பப்படுவனவற்றைச் சொல்லித் தமக்குப் பயன்படாதனவற்றைக் கேட்டாலும் சொல்லாது விடுக, (எ- று) .

சொல்லாது விடலாவது துரதனை நுமக்குப் படை எவ்வளவு

உண்டென்று பகையரசன் வினாவினால், நீ அறியாத தொன்றோ வென்று அளவு கூறாமை. வினையில என்றமையால் பயன்

உண்டாயின் சொல்லுக என்பது கருத்து. தன் அரசன் பெண்டிர் முதலாயினாரைக் கேட்டார்க்குச் சொல்லாமை. இவை போல்வன சொல்லாமை வேண்டும் என்றது. 2

693. செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையு விைத்தொழுக

வான்ற பெரியா ரகத்து.