பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213

7. மன்னரை சேர்ந்தொழுகுதல்

(இ-ஸ்) தீக்காய்வாரைப் போல நீங்குதலும் செய்யாது, குறு குதலும் செய்யாது மாறுபாடு இல்லாத வேந்தரைச் சேர்ந்தொழுக அமாத்தியர், (எ-று).

இது, சார்ந்தொழுகுந் திறன் கூறிற்று. இத்துணையும் பெரும் பான்மையும் மாற்றரசரை நோக்கிற்று. 7

998. கொளப்பட்டே மென்றெண்ணிக் கொள்ளாதசெய்யார்

துளக்கற்ற காட்சி யவர்.

(இ-ள்) யாம் அரசனாலே கைக்கொள்ளப்பட்டே மென்று நினைத்து, அவன் நெஞ்சிற் கொள்ளாதன செய்யார், அசைவற்ற தெளிவுடையார், (எ-று)

இஃது, அரசன் இசைவன செய்ய வேண்டுமென்றது. 8

699. பழைய மெனக்கருதிப் பண்பல்ல செய்யுங்

கெழுதகைமை கேடு தரும். (இ-ள்) யாம் பழைய மென்றுகருதி, இயல்பல்லாதன வற்றைச் செய்யும் நட்பின் தகைமை, தனக்குக் கேட்டைத்தரும், (எ-று).

இது, இயற்கையல்லாதன தவிரல் வேண்டுமென்றது. 9.

700. இளைய ரினமுறைய ரென்றிகழார் நின்ற

வொளியோ டொழுகப் படும்.

(இ=ள்) இவர் நமக்கு இளையரென்றும் இத்தன்மையாகிய முறையரென்றும் இகழாது, அவர் பெற்றுநின்ற தலைமையோடே பொருந்த ஒழுகவேண்டும். (எ-று).

முறையர் என்றது இளங்கிழமை முறை. இது காலத்துக்குத் தக்க காட்சி செய்யவேண்டுமென்றது. இவை மூன்றும் பெரும் பான்மையும் தன் அரசனை நோக்கிற்றின. I ()

  • உடைய’ என்பது மணக்குடவர் பாடம்