பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

8. குறிப்பறிதல்

குறிப்பறிதலாவது அரசர் உள்ளக் கருத்தை அமைச்சர் அறி தலும் அமைச்சர் உள்ளக் கருத்தை அரசர் அறிதலும் இஃது அமைச்சரியலாதலின் அமைச்சர் குறிப்பறிதல் கூறியதென்னை யெனின், குறிப்பறிதல் அரசர்க்கு வேண்டுமாதலின், இறந்தது காத்தலென்னுந் தந்திரயுத்தியாற் கூறப்பட்டதென்க, இது பெரும் பான்மையும் அரசர்க்கும் வேண்டுதலின், மன்னரைச் சேர்ந் தொழுகலின் பின் கூறப்பட்டது.

7.01. முகத்தின் முதுக்குறைந்த துண்டோ வுவப்பினுங்

காயினுந் தான்முந் துறும்.

(இ-ள்) முகம்போல முதிர்ந்த அறிவுடையது பிறிதுண்டோ? ஒருவனை உவப்பினும் வெறுப்பினும் தான் முற்படக் காட்டும், (எ-று).

குறிப்பறியுமாறு என்னை யென்றார்க்கு, இது முகம் அறி விக்குமென்றது. 1

792. அடுத்தது காட்டும் பளிங்குயோ னெஞ்சங்

கடுத்தது காட்டு முகம்.

(இ-ள்) தன்னையடுத்த வண்ணத்தைக் காட்டுகின்ற

பளிங்கைப்போல நெஞ்சத்து மிக்கதனை முகம் காட்டும், (எ-று)

மேல்முகமறிவிக்கு மென்றார்; அஃதறிவிக்குமாறென்னை

என்றார்க்கு (முகம்) வெகுட்சி யுண்டாயின் கருகியும் மகிழ்ச்சி யுண்டாயின் மலர்ந்தும் காட்டுமென்றது. 2

7.03. துண்ணிய மென்பா ரளக்குங்கோல் காணுங்காற்

கண்ணல்ல தில்லை பிற.

(இ-ள்) யாம் நுண்ணிய அறிவுடையமென்பார் பிறரை அளக்குங் கோல உபது விசாரிக்குமிடத்துக் கண்ணல்லது பிற இல்லை. ஆதலான் கண்கொண்டறிந்து கொள்க, (எ-று)