பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 | 6

8. குறிப்பறிதல்

708. ஐயப் படாஅ தகத்த துணர்வாரைத்

தெய்வத்தோ டொப்பக் கொளல்.

(இ-ள்) பிறர் நினைத்ததனை ஐயப்படுதலின்றித் துணிந்து

அறியவல்லாரைத் தேவாோடு ஒப்பக் கொள்க, (எ-று).

அவரும் பிறர் நினைவு அறிவர்; இவரும் அவ்வாறு அறி இவரை த் தேவராக மதிக்கப்படும் என்றது. இவை 8

தலான் பிரண்டும் குறிப்பறிந்தார்க்கு உளதாகும் நன்மை கூறின.

7.09. முகநோக்கி நிற்க வமைய மகநோக்கி

மற்ற துணர்வார்ப் பெறின்.

(இ-ள்) முகத்தை நோக்கி நிற்க, அமையும்; தன் மனத்தை நோக்கி அறிலுற்றதனை அறியவல்லாரைப் பேறின், (எ-று)

எனலே, அமாத்தியர் குறிப்பை அரசரும் அறியவேண்டு மென்றவாறாயிற்று; நிற்கின்ற தொழில் அமாத்தியன் கண்ண

தாகலான். 9

710. குறிப்பிற் குறிப்புணர் வா ரை யமுறுப்பினுள்

யாதுங் கொடுத்துக் கொளல். (இ-ள்) முகக் குறிப்பினாலே உள்ளக்கருத்தை அறியுமவர் களைத் தன் உறுப்பினுள் வேண்டுவது யாதொன்றாயினும் கொடுத்துத துணையாகக் கூட்டிக் கொள்க, (எ-று).

உறுப்பினுள் என்பதனைத் தனக்கு அங்கமாயினவற்றுள் எனினும் அமையும். குறிப்பறிவாரை அறிதல் குறிப்பறிதலாயிற்று. குறிப்பறிவாரை அரசன் கடியப்படுமோ கூட்டப்படுமோ என்று ஐயமுற்றார்க்குக் கூறப்பட்டது. இவையிாண்டும் அரசன் மேலன 10