பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221

10. அவையஞ்சாமை

7 4. பல்லவை கற்றும் பயமிலரே நல்ல வையு

ண ன்கு செலச் சொல்லா தார்.

(இ-ள்) பல நூல்களைக் கற்றாலும் ஒருபயனுடையரல்லர்: நல்லவையின் கண் நன்றாக அவர்க்கு ஏற்கச் சொல்லமாட்டாதார்; (எ-று).

இஃது, அ வை யஞ்சு வார் கற்றகல்வி பிறர்க்குப் பயன்படா தென்றது. 4

725. வானொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடென்

னுண்ணவை யஞ்சு பவர்க்கு.

(இ-ள்) வாளினாற் பயனென்னை வன்கண்ணரல்லாதவர்க்கு அதுபோல நூலினாற் பயனென்னை நுண்ணிய அவையின்கண் அஞ்சுபவர்க்கு (எ-று).

இது, பிறர்க்கு பயன்படாமையன்றித் தமக்கும் பயன் படா தென்றது. 5

72.6. பகையகத்துப் பேடிகை யொன்வா ளவையகத்

தஞ்சு மவன்கற்ற நால்.

(இ-ள்) பகையின்கண் அஞ்சுமவன் பிடித்த கூர்வாள் போலும், அவையின் கண் அஞ்சுமவன் கற்ற நூலும், (எ-று).

மேல் ப ய னி ல் ைல யென்றார், இது பயனில்லாதவாறு காட்டிற்று. 6

727. கல்லா தவரிற் கடையென்ய கற்றறிந்து

நல்லா ர வையஞ்சு வார்.

(இ-ள்) கல்லாதவரினும் கடையென்று சொல்லுவார் உலக கத்தார் கற்றறிந்துவைத்தும், நல்லாரிருந்த அவையின்கண் சொல்லு தலஞ்சுவாரை, (எ-று).

இது, கல்லாதவரினும் இகழப்படுவரென்றது. 7