பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

1 G அவையஞ்சாமை

7.28. உளரெனினு மில்லாரோ டொப்பர் களனஞ்சிக்

கற்ற செ லச்சொல்லா தார்.

(இ-ள்) உளராயினும் செத்தாரோடு ஒப்பர்; அவைக்க ளத் தஞ்சித் தாம் கற்றதனை அவர்க்கு இசையச் சொல்ல மாட்டா தார். (எ-று) .

(இது. செத்தாரோடு ஒப்பரென்றது.) இவை ஐந்தும் அவை யஞ்சுதலான் வருங்குற்றம் கூறின. &

7 29. ஆற்றி னளவறிந்து கற்க வ ைவயஞ்சா மாற்றங் கொடுத்தற் பொருட்டு.

( இ-கள்) அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக, நெறி யானே அளவு கூறு நூல்களை அளவறிந்து கற்க, (எ-று).

அளவு-பிய மானம். அது கூறும் நூல்களாவன; மீமாம்சை முதலான நூல்கள் . கல்வியா வது மெய்யாராய்ச்சியான நூல்களைக்கற் றலும், வேத வேதாங்கம் கற்றலும், உழவும் வாணிகமும் கற்றலும், படைவழங்கல் ஆகிய தண்ட நீதி கற்றலு மென நான்கு வகைப்படும் என்பது கெள டவ்ய மதம் அந்த நான்கினும் பின் கூறிய இரண்டும் சொல்லாண்மை அன்மையானும், வேதம் கேட்டல் சொல்லாதே அமைதலானும், அ வையிற்றைக் கூறாது தருக்கம் கற்றார்க்கல்லது மறு மாற்றம் சொல்லுதல் அரிதாதலின் அதனைக் கற்க வேண்டும் என்று இது கூறப்பட்டது. 9.

7ல் 0. வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்

றொகையறிந்து தாய்மை யவர். ( இ-ள்) தப்பினால் வருங் குற்றத்தை வகையறிந்து கற்று வல்ல அவையின் கண் அச்சத்தினால் சோர்வுபடச் சொல்லார், சொற்களின் தொகுதியை யறிந்த துாய்மையையுடையவர் (எ-று) .

மேற்கூறிய வாற்றால் கற்றவர்கள் தப்பச் சொல்லாரென்று அக்கல்வியால் வரும் பயன் கூறிற்று, 10

(அமைச்சியல் முற்றிற்று)