பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227

2. அரண்

வலியுடையோர்க்கும் ஒரு காலத்தே வேண்டுதலின் வேண்டும் என்றார். இஃது அரண் செய்ய வேண்டும் என்றது. 1

742. மணி நீரு மண்னு மலையு மணிதிழற்

காடுமுடைய தர ண்.

(இ-ள்) தெளிந்த நீராயினும், நிழலும் நீருமிலாத வெறு நிலமாயினும், மலையாயினும், அழகிய நிழலினையுடைய காடா யினும் உடைய இடம் அரண், (எ-று).

மலைய ரண் என்றும் காட்டரண் என்றும் கூறுபசேற்றாண் என்பதும் ஒன்றுண்டு. அதுவும் இவற்றினுள் அடங்கும். இஃது அரண் செய்யும் இடம் கூறிற்று. 2.

743. உயர்வகலந் திண்மை யருமை சித் நான்கி

னமைவரணா மென்றுரைக்கு நால்.

(இ-ள்) உயர்ச்சியும் அகலமும், திண்மையும் கிட்டுதற்கு அருமையுமென்னும் இந்நான்கினது அமைதியுடையது மதிலா மென்று சொல்லுவர் நூலோர், (எ-று).

அருமையாவது, முதலையும் கிடங்கும் அடியொட்டியும் முத லாயினவற்றால் கிட்டுதற்கருமை. அமை வென்றது, இதனின் மேல் செய்யப்படாது என்னும் அளவுடைத்தாதல் திண்மையென்பது கல்லும் இட்டிகையும் இட்டுச்செய்தல். இஃது அரண்செய்யுமாறு கூறிற்று. 3

744 முனை முகத்து மாற்றலர் சாய வினைமுகத்து

விறெப்தி மாண்ட தர ண்.

( இ-ள்) முத்துற்ற முகத்தினையுடைய பகைவர் கெடும்படி யாக, வினை செய்யும் இடத்து வெற்றி யெய்தி மாட்சிமைப்பட்டது

சகா து

அரனாவது, (எ-று) . * .3

அஃதாவது அட்டாலகமும் மதிற்பொறியும் முதலாயின மதிற் றலையில் அமைத்தல். இது மதில் தலையில் கருவிகள் அமைக்க வேண்டும் என்றது. 4.