பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

229

2. அரண்

(இ-ள்) சூழவிட்டும், சூழவிடாதே ஒருபக்கம் முறிய எறிந் தும், அரனுள்ளாரைக் கீழறுத்தும் இம்மூன்றினாலும் கொள்ளுதற்கு அரியது அரணாவது, (எ-று) .

அரண் கொள்வார்க்கு உபாயம் இம்மூன்றல்ல தில்லை. இம்மூன்றினானும் கொள்ளப்படாமை வேண்டும் என்றது. 8

749. முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்

பற்றியார் வெல்வ தரண்.

(இ-ள் சூழவிடுதலைச் செய்து, மதிலைச் சூழ்ந்து பொரு வாரையும் அரணையும் பற்றுதலைச் செய்து மதில் தலையைப் பற்றி யார்வெல்வது அரணாவது, (எ- று) .

இ ஃ து அரணில்லாமையேயன்றி வெல்லவும் வேண்டும் என்றது. 9

75 0, எனை மாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி

யில் லார்க ணரில்லை யரண்.

(இ-ள்) சொல்லப்பட்ட எல்லா மாட்சிமையும் உடைத்தா யினும், வினையின்கண் மாட்சிமை இல்லாதார் மாட்டு அரனாற் பயனில்லை, (எ-று).

=_

இது, வினைசெய்ய வல்லாரும் வேண்டு மென்றது. 10