பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

3. பொருள் செயல்வகை

ப்ொருள் செயல் வகையாவது பொருள்தேடுமாறும் அதனாற் பயன் கொள்ளுமாறும் கூறுதல். இது (மேற் கூறிய) நாடும் நகரமு முடையார்க் குளதாவதொன்றாதலின், அதன் பின் கூறப்பட்டது.

751. செய்க பொருளைச் செறுநர் செ ருக்கறுக்கு

மெஃகதனிற் கூரிய தில். (இ-ள்) பொருளையுண்டாக்குக: பகைவரது பெருமிதத்தை யறுக்கலாங்கருவி, அப்பொருள்போலக் கூரியது பிறிது இல்லை. (எ-று).

இது, பொளிட்ட வேண்டுமென்றது. I

752. அருளோடு மன்பொடும் வாரா ப் பொருளாக்கம்

புல்லார் புரள விடல்.

(இ-ள்) அருளோடும் அன்போடும் வாராத பொருளால் வரும் ஆக்கத்தை பொருந்தாது போக விடுக, (எ-று).

எனவே பொருள் ஈட்டுங்கால் பிறர் வருத்தத்துக்குப் பரியாதும் பயின்றார் மாட்டுக் காதலழியவும், பொருள் தேடுதலைத் தவிர்க வென்ற வாறாயிற்று. 2

753. அறனினு மின்பமு மீனுந் திறனறிந்து

தீதின்றி வந்த பொருள்.

(இ-ள்) அறத்தையும் பயக்கும்; இன்பத்தையும் பயக்கும்; பொருள் திறனறிந்து பிறர்க்குத் தீமை பயத்தலின்றி வந்த பொருள்

(எ-று).

பொருளால் பயன் அறஞ்செய்தலும் இன்பம் நுகர்தலும் அன்றே; அவ்விரண்டினையும் பயப்பது நியாயமாகத் தேடின பொருளாதலின் பொருள் தேடுங்கால் நியாயத்தோடு தேட வேண் ம்ெ என்றது. 3