பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

3. பொருள் செயல்வகை

மேல் பொருளுடையாற்கு அறம் எளிதென்றார்; இது பெறு மாறென்னை என்றார்க்கு, அன்பும் அருளும் இயல்பாக உடை ரா யினும் பொருளிலராயின் அவற்றால் பயனில்லையாம்; ஆதலால் பொருளுடையாற்கே அறஞ் செய்யலாவதென்று கூறப்பட்டது 7

758. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்ல தில்லை பொருள்.

(இ-ள்) ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் பொருளாக மதிக்கப் பண்ணுகின்ற பொருளையல்லது வேறு பொருள் என்று சொல்லலாவதில்லை, (எ-று).

மேல் இன்பம் எளிதாகவரும் என்றார்; அஃது எளிதாக வரு மாறு என்னை? வடிவில்லாதாரைப் பெண்டிரிகழ்வார்; ஆகவின் நன்னெறி உற்றார்க்குப் பொருளுடை பாரை யாவரும் நன்கு மதிப்பரென்று கூறப்பட்டது. 8

759. பொருளென்னும் பொய்யா விளக்க மிருளறுக்கு

மெண்ணிய தேயத்துச் சென்று.

(இ-ள்) பொருள் ஆகிய மெய்யான ஒளி, எண்ணப்பட்ட தேச மெல்லாவற்றினுஞ் சென்று இருள் அறுக்கும், (எ-று).

இருளாவது ஒளியில்லாத இடம். பொருள் உண்டாகப்புக ழுண்டாம்; புகழ் உண்டாக ஒளி எங்கும் பரக்கும் என்றது. அரசன் பொருளுடையனாயின் தான் கருதிய தேயமெல்லாவற்றினும் தன்னாணை நடக்குமென்றுமாம். த

769 இல்லாரை யெல்லாரு மெள்ளுவர் செல்வரை

யெல்லா குஞ் செய்வர் சிறப்பு. (இ-ள்) பொருளில்லாதாரை எல்லாரும் இகழ்வர், பொரு ளுடையாரை எல்லாருஞ் சிறப்புச் செய்யர், (எ-று).

சிறப்பெய்தலும் இதனானே வருமென்றது. 10