பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233

4. படை மாட்சி

படைமாட்சியாவது படையினது நன்மை கூறுதல். இது மேற்கூறிய பொருளின் உண்டாமாதலானும், அதனை ஈட்டுதற்கும் காத்தற்கும் படை வேண்டும் என்பதனாலும், அதன்பின் கூறப் பட்டது.

761 உறுப்பமைத் தரறஞ்சா வெல்படை வேந்தன்

வெறுக்கையு ளெல்லாந் தலை.

(இ-ஸ்) யானை குதிரை தேர் கருவிகளாகிய உறுப்புக்களால் அமைந்து, இடுக்கண் உற்றால் அதற்கு அச்சமின்றி, வெற்றி யுடைய படை, அரசன்தேடியபொரு ளெல்லாவற்றினும் தலையான பொருள்; (எ-று).

ஆதலால், படைவேண்டும் என்றது. 1

7.62. அழிவின் றறையோகா தாகி வழிவந்த

வன்க ணதுவே படை.

(இ-ள்) கெடுதலின்றிக் கீழ் போகாதாகிக் குலத்தின் வழி லந்த அஞ்சாமையையுடையது படையாவது, (எ-று).

வழிவருதல்-வீரன்மகன் வீரனாகுதல். இது, படையினது தன்மை கூறிற்று. 2

763. மறமான மாண்ட வழிச்செலவு தேற்ற

மெனநான்கே யேமம் படைக்கு.

(இ-ள்) மறமும், மானமும், நல்வழிச்சேறலும், தெளிவு உடைமையுமென்னும் நான்கும் படைக்கு அரணாம். (எ-று).

நல்வழிச்சேறலாவது, மறஞ்செய்யுங் கால் அறத்தின் வழிச் செய்யும் தெளிவு, கலக்கமின்மை. மேல்கெடாமை வேண்டும் என்றார்; இது கெடாமைக்குக் காரணம் கூறிற்று. J.