பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235

4. படை மாட்சி

சிறுமை உறுதலாவது, இழிந்தார் பெற்ற சிறப்பு உயர்ந்தார் பெருமை. போகாத்துன்பமாவது, பெண் டிரைக் கைக்கொள்ளு த லும் இளிவரவு செய்தலும் போல்வன. வறுமையாவது கொடாமை. இது படைக்கு அரசன் செய்யும் திறன் கூறிற்று. 7.

768. அடற் றகையு மாற்றலு மில்லெனினுந் தானை

படைத்தகையாற் பாடு பெறும்.

(இ-ள்) பகைவரை க் கொல்லுந் தகுதியும், அவர்மேல் வந்தால் பொறுக் கும் ஆற்றலும் இல்லையாயினும், சேனையானது படையழகினானே பெருமை பெறும், (எ-று).

படையழகென்றது (தேர் யானை குதிரைகளின்) அலங் காாமும், கொடியும் குடையும் முரசும் கா களமும் முதலாயினவற்றால் அழகு பெறுதல். இதுவும் அரசன் அமைக்க வேண்டு மென்றது. சி

769. ஒலித்தக்கா லென்னா முவரி யெலிப்பகை

தாக முயிர்ப்பக் கெடும்.

(இ-ள்) கடல்போல ஒலித்தக்காலும் எலியினது மாறு பாட்டினால் வருந்தீமை யென்னுளதாம்; அவ்வொலி நாகம் உயிர்த்தவளவிலே கெடும். (எ-று ).

இது படைமிக்கது வெல்லுமென்று கருதாது வீரரைத் தெளிந் தாள வேண்டு மென்றது. 9

770. நிலை மக்கள் சால வுடைத்தெனினுந் தானை

தலைமக்க ளில்வழி யில்.

(இ-ள்) நிலையுடைய வீரரைப்பெரிது உடைத்தாயினும் படையானது தனக்குத் தலைவனை இல்லாத விடத்து வெற்றி யில்லையா ம், (எ-று).

இது படையமைந்தாலும் படைத்தலைவன் அமைக்க வேண்டு மென்றது. இவையிரண்டும் படையாளும் திறம் கூறின. 10