பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

5. படைச்செருக்கு

படைச்செருக்காவது படையினது வீரியங் கூறுதல். இது படைக்கு இன்றியமையாதது ஆயினமையின், அதன்பின் கூறப் பட்டது.

77.1 . உறினுயி ரஞ்சர மறவ ரிறைவன் செறினுஞ்சீர் குன்ற லிலர்.

(இ-ள்) ஒன்றுஉற்ற காலத்து உயிர்ப்பொருட்டு அஞ்சாத மறவர் தம்மரசனால் செறுக்கப்பட்டாராயினும், தமது தன்மை குன்றுதல் இலர், (எ-று).

மேல் அதிகாரத்துச்சிறுமை முதலாயின செய்யின் படை வெல்லாது என்றார்; ஆயினும் இயல்பாக அஞ்சாமையுடையார் வீரியஞ் செய்யுமிடத்துக் குறைய நில்லாமை வேண்டுமென்றது. 1

772. பேராண்மை யென் ப தறுகனொன் றுற்றக்கா

லுனராண்மை மற்றத னெ.கு.

(இ-ள்) ஒருவனுக்குப் பெரிய ஆண்மையென்று சொல்லுவர்; ஒன்றுஉற்றக்கால் அஞ்சானாதலை அவ்வாண்மைக்குப் படைக்கல மென்று சொல்லுவர் உலகியலறிந்து செய்தலை, (எ-று).

உலகியலறிதல்-தனக்கு எளியார்மேல் செல்லாமை, இது விரம் செய்யுங்கால் எளியாரை அடராமை வேண்டும் என்றது. 2

773. கான முயலெய்த வம்பினின் யானை பிழைத்தவே லேந்த லினிது.

(இ=ள்) காட்டகத்து முயலைப் பட எய்த அம்பினும், யானையைப் பிழைக்க எறிந்த வேலை யேந்துதல் இனிது, வீரற்கு,

(எ-று).

இது மேலதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. 3