பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237

5. படைச்செருக்கு

774. என்னை முன் னில்லன் மின் றென்விர் பலரென்னை

முன்னின்று கன்னின் றவர்.

(இ-ள்) என்னுடைய அரசன் முன்னர் ப் பகைவீர்; நில்லா தெ ழிமின்; முன்னாள் இவன் முன்னே நின்று, கல்லெழுதப்பட்டு

நிற்கின்றார் பலராதலான், (எ-று).

இஃது எளியாரைப் போகச்சொல்லி எதிர்ப்பாரோடு பொா

வேண்டுமென்றது. 4.

77.5. கைவேல் களிற்றோடு போக்கி வருபவன்

மெய்வேல் பறியா தகும்.

( இ-ள்) தன் கையில் வேலை ஒரு களிற்றோடே போக்கி, அதன்பின் கருவி தேடிச் செல்லுமவன், தன் மெய்யின் மேற்பட்ட வேலைப் பறித்துக் கருவி பெற்றே மென்று மகிழும், (எ-று).

வீரர் செயல் இத்தன்மையதாதலால், புண்பட்டால் அதற் காற்றிப்பின்னும் போரின் கண் காதல் செல்ல வேண்டும் என்றது. 5

776. விழித்த கண் வேல் கொண் டெறிய வழித் திமைப்பி

னே ட்டன்றோ வன்க ணவர்க்கு

(இ-ள்) மாற்றாரோடு எதிர்த்துச் சிவந்து நோக்கின கண்ணிலே ஒரு வேலினானே எறிய, அதற்கு மீண்டும் இமைப் பர யின், இது கெட்டதனோடு ஒக்கும் அஞ்சாதார்க்கு (எ-று).

விழித்த கண் என்பதற்கு மாற்றாரை நோக்கி யிமையாத கண் எனினும் அமையும். புண்பட்டால் ஆற்றாராயின் கெட்டத னோ டொக்கும் என்றது.

777. விழுப்புண் படாததா னெல் லாம் வழுக்கினுள்

வைக்குந்தன் னாளை யெடுத்து.

(இ-ள்) தனது வாழ்நாளாகிய நாளை யெண் ணி, அவற்றுள் விழுமிய புண்படாத நாளெல்லாவற்றையும் தப்பின நாளாக வெண் ணி வைக்கும் வீரன். (எ-று).