பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

5 படைச்செருக்கு

இது போரின்கண் முகத்தினும் மார்பினும் புண்படவேண்டும். முதுகு புறங்கொடாமையும் வேண்டு மென்றது. 7

778. சுழலு மிசைவேண்டி வேண்டா வுயிரார்

கழல் யாப்புக் காரிகை நீர்த்து.

(இ-ன்) பரவும் புகழை விரும்பி உயிரை விரும்பாதவர் கழல் கட்டுதல் அழகுடைத்து, (எ-று) .

இது புகழ் விரும்பும் I i GT) I – வேண்டுமென்றது. 8

779, இழைத்த திகவாமைச் சாவாரை யாரே

பிழைத்த தொறுக்கிற் பவர்.

(இ-ள்) முற்கூறிய வஞ்சினம் தப்பாமல் சாவாரைத் தப்பினா சென்று பழிக்கவல்லவர் யாவர், (எ-று).

இது வஞ்சினம் தப்பின் படவேண்டுமென்றது.

780. புரந்தார்கண் iைர்மல்கச் சாகிற்பிற் சாக்கா

டிரந்து கோட் டக்க துடைத்து.

(இ-ன்) தம்மை ஆண்டவரது கண் நீர்மல்குமாறு சாவக் கட வராயின், அச்சாக்காடு எல்லாரானும் வேண் டிக்கொள்ளும் தகுதி யுடைத்து, (எ-று) .

இஃது ஆண்டவனுக்குக் கேடுவரின் படவேண்டுமென்றது.

பொருளியல் முற்றிற்று 19