பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245

2. நட்பாராய்தல்

800. ஆய்ந்தாய்ந்து கொள்ளாத சன் கேண்மை கடைமுறை

தான் சாத் துயரந் தரும்.

(இ-ள்) குற்றம் (ஆய்ந்து குண மும் ஆய்ந்து) கொள்ளா கான் கொண்ட நட்புப் பிற்காலத்துத் தான் சாதற்கு ஏதுவான துன்பத்தைத் தரும், (எ-று) . 10

இஃது ஆராய சமையால் வருங்குற்றங் கூறிற்று.

3. பழைமை

பழைமையாவது நட்டோரது உரிமை கூறுதல். இஃது அவருரி மையால் செய்வனவற்றிற்குப் பொறுக்கவேண்டுமென்று அதன்பின் கூறப்பட்டது.

8.01. பழைமை யெனப்படுவ தியாதெனின் யாதுங்

கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

(இ-ள்) பழைமையென்று சொல்லப்படுகின்றது யாதெனின், யாதொன்றினையும் உரிமை அறுத்தலில்லாத நட்பு, (எ-று)

இது பழைமையாவது இது என்று கூறிற்று. 1

802. நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்

குப்பாதல் சான்றோர் கடன்.

(இ-ள்) நட்பிற்கு அங்கமாவது உரிமை; அவ்வுரிமையால் செய்யுமதற்கு உடம்படுதல் சான்றோர்க்கு இயல்பு, (எ-று)