பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

4 தீ நட்பு

தி ந ட் ப ா வ து தீயகுணத்தாாாகிய மாந்தரோடு நட்

தனால் வரும்குற்றங் கூறுதல். மேல் நட்பாராய்தல் கூறுகின்றுழ நட்கப்படாதா ரைக் கூறி ஈண்டும் கூறுதல் (கூறியது கூறலாம் பிற வெனில், அற்றன்று; அதனுள் நட்கப்படாதாரைக் கூறினார்; இதனுள் அவரால் பயனின்மை கூறினார். ஆதலின் வேறு படுத்துக் கூறப்பட்ட தென்க. மேல் நட்பினால் வரும் பயனும் அவரோடு ஒழுகும் திறனும் கூறினார்; இது நட்பினால் வரும் பயன் கூறு கின்றது. ஆதலின் அதன்பிற் கூறப்பட்டது.

811. அம கத் தாற்றறுக்குங் கல்லாமா வன்னார்

தமரிற் றனிமை கலை.

(இ-ள்) தெருவின் கண் நெறிப்பட நடந்து அமரின் கண் ஏறி ன வன் வலிமையைக் கெடுக்கும் அறிவில்லாத குதிரையைப் போல் வார் தமராவதின் தனியனாதல் நன்று, (எ-று).

தனிமை தீ தென்பது முன்டே அமைந்துகிடந்தது. இந் தட்பின் கொடுமை யதுவும் நன்றாயிற்று. தீமைக்கு அளவின்மை யின் இவ்வாறு கூறினார். இவ்வுரை மேல்வருவனவற்றிற்கும் ஒக்கும். இது கயவர் நட்புத் தீமைபயக்கு மென்றது. I

812. செய்தேமஞ் சாராச் சிறியவர் யுன்கேண்மை

யெய்தலி னெய்தாமை நன்று.

(இ-ள்) நட்புச்செய்து தனக்குப் பாதுகாவலாகாத புல்லி யாரது புல்லிய நட்பைப் பெறுவதினும், பெறாமை நன்று, (எ-று).

இது சிறியார் நட்புத் தீமைபயக்கு மென்றது. சிறியார் ஆவார் சூதர், வேட்டைக்காரர். பெண் டிர் போல்வார். 2

813. பேதை பெருங்கெழிஇ நட்பி னறிவுடையா

ரே தின் மை கோடி யமுறும்.