பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

251

5. கூடாநட்பு

கூடா நட்பாவது சுற்றத்தாராயினும் பிறராயினும் மனத்வால் நள்ளாது நட்டாரைப் போல ஒழுகுவார் இயல்பும் அவர் ா டு ஒழுகுந்திறனும் கூறுதல். அவர் தாம் இருக்கையர் தமக்கு o மின்றிக் கருமங்: 45 i 6orb LD S நட்பாரும், பகைவராய் நட்பாரு 1. மன அவ்விருவகையாரையும் தீநட்புப்போலக் கடியவேண்டு மாதலின், அதன் பின் கூறப்பட்டது.

82.1 . இனம் போன் றினமல் லார் கேண்மை மகளிர்

மனம்போல வேறு படும்.

(இ-ள்) நட்டோர் போன்று மனத்தினான் நட்பில்லாதார் நட்பு பெண் மனம்போல வேறுபடும்; ஆதலான் அவருள்ளக் கருத்தறிந்து கொள்க, (எ-று) .

இது நட்பாயொழுகுவாரது உள்ளக்கருத்தறிய வேண்டு மென்றது. =- 1.

822. முகத்தி னினிய நகாஅ வகத்தின்னா

வஞ்சரை யஞ்சப் படும். (இ-ள்) முகத்தான் இனியவாகச்சிரிக்கு மனத் திலே, பொல் லாங்கு நினைக்கும் வஞ்சரை அஞ்சவேண்டும், (எ-று).

மேல் நட்பாய் ஒழுகுவாரது உள்ளக்கருத்து அறிய வெ னும் என்றார்; இஃதறியுங்கால் குறிப்பினாதல் சொல்லினாதல் அறிய வேண்டுமன்றே, அவையெல்லாவற்றானும் அறிதல் அரிதென்பார் முற்படக் குறிப்பினால் அறிதலரிதென்பது கூறப்பட்டது. 2 823. மனத்தி னமையா தவரை யெனைத்தொன்றஞ்

சொல்லினாற் றேற்றபாற் றன்று. (இ-ள்) மனத்தால் பொருத்தமில்லாதாரை யாதொன்றின் கண்ணும் அவர் சொல்லினால் தெளியற்பாற்றன்று, (எ-று).

இது சொல்வினால் அறிதலரிதென்றது.