பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

253

5. கூடாநட்பு

828. தீர்விடங் காணி னெறிதற்குப் பட்டடை

தேரா திரந்தவர் நட்பு.

(இ-ள்) முடியுமுடங்காணின், மற்றொருவன் எறிதற்குப் பட் டையாம்; மனத்தினால் தேராது புறத்து ஒத்தார் போல ஒழுகு வாாது நட்பு, (எ-று) .

பட்டடையாவது தான் தாங்குவதுபோல நின்று வெட்டுவார்க்கு உதவி செய்வது. இது கூடா நட்பினால் வரும் குற்றம் கூறிற்று. 8

829. மிகச் செய்து தம்மெள்ளு வாரை நகச் செய்து

நட்பினுட் சாப்புல் லற் பாற்று.

(இ-ள்) நட்டாரைப்போலச் செய்யுமவற்றை மிகச்செய்து மனத்தினால் தம்மை இகழுமவர்களைத் தாமும் மகிழுமாறு செய்து நட்பின்கண் நட்புச்சாவநட்க, (எ-று).

இது கருமம் காரண மாகி நட்டாரோடு ஒழுகும் திறன் சிக றிற்று. 9

830. பகைநட்பாங் காலம் வருங்கான் முகநட்

டகநட் பொரீஇ விடல்.

(இ-ஸ்) பகைவர்நட்பின் நட்பாங்காலம் வந்தவிடத்து முகத்தால் நட்பினைச் செய்து அகத்தால் நட்பினை நீங்கிவிடுக, (எ-று). 10

இது பகைவோ சாய நட்டோர் மாட்டு ஒழுகுந்திறன் கூறிற்று.

நட்பியல் முற்றிற்று.

கங்-து