பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

261

3. இய ல்

மேல் இகலின் கண் சாய்ந்தொழுக வேண்டுமென்றார், அது

11. ல்வி யாகாதோ வென்றார்க்கு, அவரை வெல்வாரில்லை

4.

பென் ) , .

85.5. இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை

தவலுங் கெடலு நரிைத்து.

(இ-ள்) பிறருடன் மாறுபாட்டின் கண் மிகுதல் இனிதென்று கருதுமவனும், அவன் மனை வாழ்க்கையும், சாதலும் கெடுதலும்

அணித்து (எறு) .

நிரனிறை. இது சாயானாயின், உயிர்க்கேடும் பொருட்கேடு

புண் டாெ மன்றது . 5

856. மிகன் மேவு மெய்ப்பொருள் காணா ரிகன்மேவு

மின்னா வறிவி னவர்.

(இ-ள்) மிகுதலைப் பொருந்துகின்ற உண்மைப்பொருளைக் காண மாட்டார், மாறுபாட்டினைப் பொருந்தின இன்னாத அறி வுடையார், (எ-று) .

மெய்ப்பொருள் காணார் என்றமையால் கல்வியின்கண்

தருக்கத்தினால் மாறுபடுவானா நோக்கிற்று.

இதுமாறுபடுவார்க்கு மெய்ப்பொருள் தோன்றாதென்றது. 8

857. இகலானா மின்னாத வெல்லா நகலானா

நன்னய மென்னுஞ் செருக்கு.

(இ-ள்) மாறுபாட்டினாலே துன்பங்களெல்லாம் உளவாம்; உடன்பட்டு நகுதலாலே நல்ல நயமாகிய வுள்ளக்களிப்பு உண்டாம், (எ-று).

மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் அதனைத் தவிரத் தனக்கும் பிறர்க்கும் மகிழ்ச்சி யுண்டாம் என்றது. 7

858. இகலென்னு மெள்வநோய் நீக்கிற் றவலில்லாத்

தாவில் விளக்கந் தரும்.