பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

3. இகல்

(இ-ள்) மாறுபடுதலாகிய இன்னாத நோயை நீக்குவா னாயின், அந்நீக்குதல் கேடில்லாத குறையற்ற ஒளியினைத் தரும், (எ-று).

இது, தோற்றமுண்டாக்கு மென்றது .

859. இன்பத்து வின்பம் பக்கு மிகலென்னுந்

துன் பத்துட் டுன்பங் தெடி ன்.

(இ-ள்) இன்பத்தின் மிக்க இன்பத்தை எய்தும்: மாறுபா டாகிய துன்பத்தின் மிக்க துன்பம் போமாயின், (எ-மு).

எல்லா இன்பத்தினும் மிக்க வீடுபேற் lன்பமும் எய்தும் என்றது.

8 60. பகல்கருதிப் பற்றார் செயினு மிகல் கருதி

பின்னா செ ய் யாமை தலை.

(இ-ன்) தம்மொடு பற்றில்லாதார் வேறுபடுதலைக் கருதித் தியவற்றைச் செய்தாராயினும், அவரொடு மாறுபடுதலைக் கருதித் தாமும் அவர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை நன்று (எ-று)

இது, மேற்கூறிய குற்றமும் கு ன மு. ம் பயகுமாதலின், மாறுபடுதற்குக் காரணமுள்வழியும் தவிர்தல் வேண்டும் என்றது. 10

4. பகைமாட்சி

பகை மாட்சியாவது பகைகொள்ளுங்கால் தனக்கு தன்மை பயக்குமாறு கொள்ளுதல் மேல் பகைகோடலாகாதென்றார், இது பகை கொள்ளுங்கால் நன்மை பயக்குமாயின் கொள்கவென்ற

மையால், அதன் பின் கூறப்பட்டது.