பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227

5. பகைத் திறந் தெரிதல்

87.4 . தன்றுணை யின்றாற் பகையிரண்டாற் றானொருவ

னின்றுணையாக் கொள்கவற்றி னொன்று.

f (இ-ள்) பகையிரண்டாய்த் தான் ஒருவனாய்த் தனக்குத் துணையும் இல்லாயின் . டl ) அதி யிரண் டினுள் ஒன்றை இனிய

துணையாகச் செய்து கொள்க, (எ-று).

இஃது, இருவரொடு பகைகொள்ளத்தகா தென்றது.

87.5. ஏ முற் றவரினு மேழை தமியனாய்ப் பல் லார் பகைகொள் பவன்.

(இ-ள்) பித்து உற்றவரினும் அறிவிலன்; தனியனாயிருந்து பல ரோடும் பகை கொள்ளுமவன், (எ-று).

இருவரோடு பகை கொள்ளுதல் நீதி அன்றாகப் பலரோடு பகை கொண்டவன் பித்தனோடொக்கும் என்றவாறாயிற்று. இது, பலரோடு பகை கோடலாகா தென்றது. 5

8 6. தேறினுந் தேறா விடினு மழிவின்கட்

டேறான் பகாஅன் விடல்.

(இ-ள்) பகைவனை ஆக்கமுள்ள காலத்து நட்டோனென்று தெளியலுமாம்; பகைவனென்று ஐயப்படலுமாம்; அழிவுவந்த விடத்துத் தெளிவதுஞ் செய்யாது நீக்குவதுஞ் செய்யாது ஒழுகுக, ( - )),

இது, பகைவராயினார் மாட்டு அழிவின்கண் செய்வதோ ரியல்பு கூறிற்று. 6

877. பகைதட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்

ற கைமைக்கட் டங்கு முலகு.

(இ-ள்) பகைவரை நட்புப்போலக் கொண்டொழுகவல்ல பண்புடையவன் பெருமையின் கீழே உலகம் தங்கும், (எ-று).

இது, பகை கொள்ளாமையால் வரும பயன கூறிற்று.