பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. பெண்வழிச் சேறல்

இ னித்தன்னான் வரும் துன்பப் பகுதியாவது இன்பங் காான மாக மனையாள்வழி ஒழுகுதலும். கணிகையரோடு கூடுதலும் ந nவண்டு களித்தலும், சூதாடி லும், தீய உண்டி மிக உண்டலுமென ஐந்து வகைப்படும்; இவையெல்லாம் இறுதியில் துன்பம் பயத்தலின் துன்பப் பகுதி ஆயிற்று அவற்றுள், பெண்வழிச் சேறலாவது மனைவியன் வழியொழுகு தலினால் வரும் குற்றங் கூறுதல். இது மூன்று வகைப்படும்: மனையாளையஞ் சுதலும். அவள் சொன்னது செய்தலும், அறத்தினும் பொருளினும் சாராது காதலினும் மிக்க காதலும் என. 1 (F

901. இமை யாரின் வாழினும் பாடி லரே யில்லா

ளமையார்தோ னஞ்சு பவர்.

(இ-ள்) தேவரைப்போல இன் புற்று வாழினும், பெருமை யிலரார்ை; மனையானது வேய் போலும் தோளை அஞ்சுபவர், (எ-று),

இது, செல்வமுடைய ராயினும் அவரால் பயன் இல்லாமை யால் பிறரால் மதிக்கப்படாரென்றது.

902 இல்லாளை பஞ்சுவா ன ஞ்சு:மற் றெஞ்ஞான்று

நல்லார்க்கு நல்ல செயல். (இ-ள்) மனையாளை அஞ்சு வான், எஞ் ஞான்றும் நல்லார்க்கு தல்லவை செய்தலை அஞ்சும், (எ-று).

இஃது, அறஞ்செய்ய மாட்டாரென்றது. 2 903 மனை யானை யஞ்சு மறுமையி லாளன்

வினையாண்மை வீறொய் த லின்று. (இ-ள்) மனையாளை அஞ்சுகின்ற மறுமைப் பயனெய் தாதவன், ஒரு வினையை ஆளுந்தன்மை, பெருமை பெய்துதல் இல்லை, (எ- று) .