பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

1). கள்ளுண் ணாமை

(இ-ள்) நாண மென்று சொல்லப்படுகின்ற நன் மடந்தை பின்பு காட்டிப்போம்; கள்ளுண்டலாகிய பிறரால் விரும்பப்படாத பெரிய"குற்றத்தினையுடையார்க்கு, (எ-று). -

இது, நாணம் போமென்றது. 3. 924. உட்கப் படாஅ ரொளியிழப்ப ரெஞ்ஞான்றுங்

கட்காதல் கொண்டெரழுகு வார்.

(இ-ள்)” பிறரால் மதிக்கவும் படார். தோற்றமும் இழப்பர், எல்லா நாளும் கள்ளினைக் காதல் செய்து ஒழுகுவார். (எ-று).

இது, மதிக்கவும் படார், புகழும் இலரென்றது.

டி.து”. I

9.25 துஞ்சினார் செத்தாரின் வேறல்ல ரெஞ்ஞான்று

நஞ்சுண்பார் கள்ளுண் பவர் .

(இ-ள்) உறங்கினார் செத்தாரோடு ஒப்பர், அறிவிழத்தலான் அது போல, எல்லா நாளும் கள்ளுண்பவர் நஞ்சுண்பவரை ஒப்பர். மயங்குதலான், எ-று).

இஃது, அறிவிழப்பரென்றது. 5

926. கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கா

லுள்ளான்கொ லுண்டதன் சோர்வு.

(இ-ள்) தான் கள்ளுண்ணாதபோது கள்ளுண்டு களித்தவனைக் கண்ட விடத்து நினையான் போலும்; தான் கள்ளுண்டபொழுது தனக்குள்ளதாகுஞ் சோர்வினை நினைப்பனாயின் தவிரும், (எ-று).

இது தமக்குளதாகும் குற்றம் காணாரென்றது. 6

927. களித்தானைக் காரணங் காட்டுதல் நீர்க்கீழ்’

குளித்தானைத் தீத்துரீஇ யற்று.

கள்ளுண்டு களித்தவனைக் காரணங் காட்டித் தெளிவித்தல் நீர்க்கீழ் முழுகினசனைத் தீயினான் அறிகுற்றது போலும், (எ-று).

1. கீழ்நீர்க்” என்பது மணக். பாடம்.