பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

289

12. மருந்து

(இ-ள்) உணவும் உறக்கமும் இணைவிழைச்சும் தன்னுடம் பின் அளவிற்கு மிகினும் குறையினும், நூலோரான் எண்ணப்பட்ட வாதமும் பித்தமும் சிலேஷ்மமுமாகிய மூன்றும் நோயைச்செய்யும்

-று) .

மேல் உணவு மிகின் நோய் செய்யும் என்றார்; அதுவே அன்றி மற்றுள்ளவை மிகினும் இவை மூன்றும் குறையினும் நோயாகும் என்றது. 6

947. நோய் நாடி நோய் முத னாடி யது தணிக்கும்

வாய் நாடி வாய்ப்பச் செயல்.

(இ-ள்) நோயினையும் ஆராய்ந்து, நோய் வருவதற்குக் காரண மும் ஆராய்ந்து, உளம் நோய்தீர்க்கும் நெறியும் ஆராய்ந்து, தப்பா மற் செய்க. (எ-று).

இது, நோய் தீர்க்குமாறு கூறிற்று.

948. உற்றா னளவும் பிணியனவுங் காலமுங்

கற்றான் கருதிச் செயல்,

(இ-ள்) நோயுற்றவன் அளவும், நோயின் அளவும், அது பற்றிய காலமும் அறிந்து, அதற்குத் தக்கவாறு மருந்து செய்க; ஆயுளு வேதம் வல்லார், (எ-று).

மேல் வாய்ப்பைச்செய் என்றார்; இது வாய்ப்பர் செய்யுமாறு

கூறிற்று. 8

949. உற்றவன் றீர்ப்பான் மருந்துழைச் செல் வானென்

றப்பானாற் கூற்றே மருத்து.

( இ-ன்) நோய்யுற்றவனும் நோய்தீர்க்கு மவனும், அதற்குத் தக்க மருந்தும், அதனைக் காலம் தப்பாமல் இயற்றுவானும் என்றின் வகைப்பட்ட நான்கு திறத்தது மருந்து, (ா-று).

எனவே இந்நான்கினும் ஒன்று தப்புமாயின் நோய் தீராது என்றவாறாயிற்று. இது மருந்தின் பகுதி கூறிற்று. !)