பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

1. குடிமை

(இ-ள்) வித்து நிலத்தின்கண் மறைந்து கிடப்பினும், அது மறைந்து கிடந்தமையை அதன் முளை யறிவிக்கும்; அதுபோல, உயர் குடிப்பிறந்தாரை அவரவர் வாயிற்சொல் அறிவிக்குப் (எ- று) .

இதனானோகுடிப்பிறந்தார் இன்னாத சொல்லார் என்ற வாறாயிற் T}). 4.

955. அடுக்கிய கோடி பெறினுங் குடிப்பிறந்தார்

குன்றுவ செய்த லிலர்.

(இ-ள்) பல கோடிப் பொருளைப் பெறினும், உயர்குடிப் பிறந்தார் தங்குடிக்குத் தாழ்வாயின செய்யார், (எ-று) .

5

இது, மானம் விடாரென்றது.

95 6. சலம் பற்றிச் சால் பில செய்யார்மா சற்ற

குலம் பற்றி வாழ்து மென் பார்.

( இ-ள்) பொய்யைச் சார்ந்து, அமைவில்லாதவற்றைச் செய் யார் குற்றமற்ற குலத்தைச் சார்ந்து வாழ்வே மென்று கருதுவார். (எ-று) . i

இது, சான்றாண்மை விடார் என்றது. 6

957. வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி

பண் பிற் றலைப்பிரித லின்று.

(இ-ள்) வழங்கும் பொருள் தம்மளவிற்குக் குன்றிச் சுருங்கிய விடத்தும், பழைய மரபு வழுவாத குடிப்பிறந்தார் தமது இயல் பினின்றும் நீங்குத விலர். (எ-று).

இது பொருளில்லாத காலத்தும் இயல்பு குறையார் என்ற மையின், ஒப்ரபுவு செய்தலும் தவிராங் என்ற வாறாயிற்று. இது பண்புடைமை விட ரென்றது. இவை ஏழும் குடிப்பிறந்தார் இலக்

FT

கண ம் கூறின. H

958 நலம்வேண்டி னானுடைமை வேண்டுங் குலம்வேண்டின்

வேண்டுக யார்க்கும் பணிவு.