பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

2. மானம்

961 . இன்றி யமையாச் சிறப்பின வாயினு ங்

குன்ற வருப விடல். (இ-ள்) இன்றியமையாத சிறப்புடையனவாயினும், தமது தன்மை குறையவரும் பொருளையும் இன் பத்தையும் விடுக. (எ-று).

இது, பொருளும் இன்பமும் மிகினும், தன்மை குறைவன செய்யற்க வென்றது. I

962. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய

சுருக்கத்து வேண்டு முயர்வு.

(இ=ள்) செல்வம் பெருகிய காலத்து எல்லார்க்கும் பணிந் தொழுகுதல் வேண்டும்; செல்வம் மிகவுஞ் சுருங்கின காலத்துத் தமது தன்மை குறைவுபடாமல் ஒழுக வேண்டும், (எ-று).

இது, ‘திருவுடையார் பணிவு புகழப்படும்; திரு இலாதார் பணிதல் இகழப்படும்; ஆதலான் நல் கூர்ந்த காலத்தும் தன்மை

குறைவன செய்யற்க’ என்றது. 2

963 சீரினுஞ் சீரல்ல செய்ய ரே சீரொடு பேராண்மை வேண்டு பவர்.

(இ-ள்) தமக்குப் பொருள் மிகுதி உண்டாயினும், நிகரல் லாதன செய்யார், தலைமையோடே கூடப் பெரிய ஆண்மையை

விரும்புவார், (எ-று).

இது, நல்கூர்ந்தகாலத்துச் செல்வம் உளதாயின் தமது தன்மை குறைந்து குடி செய்தல் வேண்டாவோ என்றார்க்குத் தலைமக்கள் செய்யார்’ என்று கூறப்பட்டது. .3

964. தலையி னிறித்த மயிரனையர் மாந்தர்

நிலையி னிறிந்தக் கடை.

(இ-ள்) தலையினின்று நீங்கின மயிரைப்போல இழப்படுவர், மாந்தர் தமது நிலையினின்று நீங்கித்தாழ ஒழுகின விடத்து, (எ-று).

மேல் தலைமக்கள் செய்யார் என்றதனாற் குற்றமென்னை என்றார்குக் கூறப்பட்டது. 4.