பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

2. மானம்

பெருந்தகைமை அழியவந்தவிடத் தென்று கூட்டுக. இஃது அதற்கு அழிவு வரவுளதாயின் சாவ வேண்டும் என்றது. 8

9 69. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னா

ருயிர்நீப்பர் மானம் வரின்.

(இ-ள்) ஒருமயிர் நீங்கின் உயிர்வாழாத கவரிமாவைப் போன்ற மானமுடையார், அம்மானம் அழியவரின் உயிரைவிடு வார், (எ-று). +

மேல் சாவ வேண்டும் என்றார்; அது செய்யல் ஆகுமோ என்றார்க்கு, மானமுடையார் சாவர் என்றது. 9

970. இனிவரின் வாழாத மான முடையா ரொளிதொழு தேத்து முல கு.

(இ ள்) இளிவரவு உண்டானால், உயிர் வாழாத மானமுடை யாரது புகழைத் தொழுது துகிக்கும் உலகு, (எ-று).

மேல்சா வார் என்றதனாற் பயனென்னை என்றாற்கு இது கூறப்

10

பட்டது

3. பெருமை

பெருமையாவது மேன்மை; அஃதாவது சிறியர் செய்வன செய்யாமை. அது பின்பு காணப்படும். இதுமானமுடையார்க்கு உளதாவதொன்றாதலின் அதன் பின் கூறப்பட்டது. அன்றியும் குடிப்பிறந்தார்க்கு உளதாகும் நற்குணம் எனினும் அமையும். இவ் வுரைமேல் வருவனவற்றிற்கும் ஒக்கும். குணங்கள் பலவும் சேரக் கூறுகின்றாரா கலின் அதன்பின் கூறப்பட்டது.