பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

3. பெருமை

மேல், குலத்தினாலும் செல்வத்தினாலும் பெரியாரைப் பெரியாரென்று கொள்ளல் படாதென்றார்; இனிப் பெருமையிலக் கணங் கூறுவார், முற்படச் செருக்கில்லாமையே பெருமையென்று கூறப்பட்டது. 4.

975. அற்ற மறைக்கும் பெருமை சிறுமைதான்

குற்றமே கூறி விடும். (இ-ள்) பெருமை பிறருடைய குறையை மறைத்துச் சொல் லும்; சிறுமை அவர்க்குள்ள நன்மையைச் சொல்லுதலைத் தவிர்ந்து குற்றத்தையே சொல்லிவிடும், (எ-று).

இது, புறம் கூறாமை பெருமையென்று கூறப்பட்டது . 5

976. ஒளியொருவற் குள்ள வெறுக்கை யினியொருவற்

கஃதிறந்து வாழ மெனல்.

(இ-ள்) ஒருவனுக்கு மனப்பெருமை புகழாம்; அதனை நீங்கி வாழுமென்று பிறர் சொல்லுதல் ஒருவனுக்கு இளிவாமாதலான்

எ-று).

இது, மிகக்கொடுக்க வல்லாரைப் பெரியரெ ன்று கூறிற் று. 6

977. ஒருமை மகளிரே போலப் பெருமையுந்

தன்னைத்தான் கொண்டொழுகி னுண்டு. (இ-ள்) தன்னைப் பிறர் விரும்பும் காலத்தினும், தன் உள்ளம் பிறரை விரும்பும் காலத்தினும் வேண்டியவாறு ஒழுகாத கற்புடைய மகளிரைப் போலப் பாதுகாத்து ஒருவன் ஒழுகுவனாயின் பெருமை யுண்டாம்; அல்லது இல்லையாம். (எ-று.

இது, பெருமையாவது நிறையுடைமை என்றுகூறப்பட்டது 7

978. பெருமை யுடையவ ராற்றுவர ராற்றி

னருமை மழடைய செயல் .

(இ-ள்) பெருமையுடையவர் நெறியினானே செய்யவல்லர்; செய்தற்கு அருமையுடைய செயல்களை, (எ-று).

இது, செய்தற்கு அரிய செய்வார் பெரியரென்றது. 8