பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

5. பண்புடைமை

(இ-ள்) பண்புடையாரைத் தோற்றி உலகமாகிய பலவகை உயிரும் உண்டாயிற்று; அத்தோற்றம் இல்லையானால் அவ்வுயிர்கள் எல்லாம் மண்ணின்கண் புக்குமாய்வது நிலை, (எ-று).

இது, பண்புடையார் பிறத்தலானே உலகநடை தப்பாமல் வருகின்றது என்றது. 5

996. நகல் வல்ல ரல்லார்க்கு மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டன் றிருள்.

(இ-ன்) எல்லாரோடும் கூடி இருந்து நகுதலைச் செய்ய மாட்டாதார்க்குப் பெரிய உலகம் பகற் பொழுதும் இருளின் பாம்

பட்டது. (எ-குறு) .

எனவே, இவனும் அறியான், அறிவிப்பாரும் இல்லை என்ற வாறாயிற்று. இது, கலந்து ஒழுகாமையால் வரும் குற்றம் கூறிற்று.

991 . பண் பிலான் பெற்ற பெருஞ்செல்வ தன் பால்

கலந்தீமை யாற்றிரிந் தற் று.

(இ-ள்) குணமில்லாதவன் பெற்ற பெரிய செல்வம் நல்ல பால் கலத்தின் தீமையர்ல் கெட்டாற் போலத் தனக்கும் பிறர்க்கும் இன்பம் பயவாது கெடும். (எ-று).

இது, பகுத்துண்ணாமையால் வரும் குற்றம் கூறிற்று. 7

998. தண்பாற்றா ராகி தயமில செய்வார்க்கும்

பண்பாற்றா ராதல் கடை.

(இ-ள்) நண்பு செய்யமாட்டாராய் விருப்பமில்லாத வற் றைச் செய்வார்க்கும் குணமாயின செய்யா ராதல் குணமுடை

யார் க்கு இழிவு. (எ-று) .

குணம் செய்யாமை இன்னா செய்தலாம். ஆதலால் பிறர் வருத்தத்திற்குப் பரியாமையால் வரும் குற்றம் கூறிற்று. &